திருபுவனை : பள்ளிநேலியனூர் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திருபுவனை அடுத்த பள்ளிநேலியனூர் திரவுபதியம்மன், பால விநாயகர், கோவில்களில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.. காலை 9 மணிக்கு பால விநாயகர், திரவுபதியம்மன் சன்னதிக்கு கும்பாபிஷேகமும், தீபாராதனை பிரசாதம் வழங்குதல், இரவு 8 மணிக்கு முத்தாலம்மன் சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை பள்ளிநேலியனூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.