கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை ஒன்றியம், ஹுனகுண்டா கிராமத்தில், 13ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர்களின் தமிழ் கல்வெட்டை, மத்திய தொல்லியல் துறை கண்டறிந்துள்ளது. மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல கல்வெட்டியல் பிரிவு இயக்குநர் முனிரத்தினம் கூறுகையில், ‘‘ஹுனகுண்டாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு, 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஊர், அப்போது ஹுலிகுண்டா என்ற பெயரில் இருந்தது, இந்த கல்வெட்டு வாயிலாக தெரியவந்துள்ளது. ‘‘இந்த கல்வெட்டில், தற்போது சாலை பணிக்கு பயன்படுத்தும் பிகாஸ் போல ஒன்றும், குதிரை போல ஏதோ ஒன்றும் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. அவை தேய்ந்துள்ளதால், அடையாளம் காண்பதில் சிரமமாக உள்ளது. தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்,’’ என்றார். – நமது நிருபர் –