Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் பகல் பத்து நான்காம் நாள்; ... ஹலசூரு பான் பெருமாள் கோவிலில் 30ல் வைகுண்ட ஏகாதசி விழா ஹலசூரு பான் பெருமாள் கோவிலில் 30ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,300 ராம பக்தர்களுடன் அயோத்திக்கு கணபதி சச்சிதானந்த சுவாமிகள் பயணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 1,300 ராம பக்தர்களுடன் அயோத்திக்கு கணபதி சச்சிதானந்த சுவாமிகள் பயணம்

பதிவு செய்த நாள்

23 டிச
2025
10:12

மைசூரு: மைசூரு அவதுாத தத்த பீடத்தின் தலைவர் ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமிகள், ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் நேற்று அயோத்திக்கு ரயிலில் புறப்பட்டார்.


பயணத்துக்கு முன் அவர் அளித்த பேட்டி: அயோத்தியில் பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட பின், தத்த பீடத்திற்கு இடம் வழங்கப்பட்டு உள்ளது. கர்நாடகா சார்பில் தத்த பீடத்தின் கிளையை அங்கு திறக்கவும், சிலையை நிறுவவும் செல்கிறேன். கர்நாடக மாநிலம் ஹனுமனின் பூமி. ஹம்பியின் கிஷ்கிந்தாவில் ஹனுமன் அவதாரம் எடுத்த இடம் உள்ளது. எனவே, ராமருக்கும், கர்நாடகாவுக்கும் இடையே ஒரு சிறப்பு உறவு உள்ளது. அதேநேரத்தில் அயோத்தியில் கட்டப்பட்ட பாலராமரின் அற்புதமான சிலையை நம் மைசூரு சிற்பியும், ஆசிரமத்தின் பக்தருமான அருண் யோகிராஜ் செதுக்கியது நமக்கு பெருமை. அயோத்தியில் தத்த பீடம் நடத்தும் நிகழ்ச்சியில், ‘ராம பரிவார்’ சிலை நிறுவப்படும். அப்போது ராம தாரக யக்ஞம் நடக்கும். இதில், 10 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பர். லட்சகணக்கான மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மைசூரில் 1,300 பக்தர்களுடன் தொடர்ந்து மூன்று நாட்கள் ரயிலில் பயணம் செய்வது இதுவே முதல் முறை. ஹைதராபாத்திலும் பக்தர்கள் எங்களுடன் இணைவர். இவ்வாறு அவர் கூறினார். பின், ஆசிரமத்தின் ஸ்ரீ தத்த விஜயானந்த தீர்த்த சுவாமிகள், கொடியசைத்து ரயிலை துவக்கி வைத்தார். அப்போது சாமராஜா பா.ஜ., – எம்.எல்.ஏ., ஸ்ரீவத்சா உடன் இருந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar