நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு, ரெனால்டு இந்தியா நிறுவனத்தினர், புதிய கார் ஒன்றை காணிக்கையாக வழங்கினர். இந்நிறுவனத்தில் தயாரிக்கப்படும் புதிய மாடல் காரை, கடந்த திங்களன்று விற்பனைக்காக அறிமுகப்படுத்தினர். இதையொட்டி, 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரின் சாவி மற்றும் அதற்கான ஆவணங்களையும், நிறுவனத்தின் அதிகாரி, தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி சீனிவாசராஜுவிடம் கடந்த ஞாயிறன்று ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில், பா.ஜ., கட்சி மாநில பிரதிநிதி பானுபிரகாஷ் ரெட்டி கலந்து கொண்டார்.