திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23பிப் 2015 05:02
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித்திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.மார்ச் 4 ல் தேரோட்டம் நடக்கிறது. முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழா 12 நாட்கள் நடக்கும். அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம்,2 க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 4 க்கு சாயரட்சை தீபாரதணை நடந்தது. 5.30 க்கு மேல் 2 ம்பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் பூதலிங்க சீவாச்சாரியார் கொடியேற்றினார். கொடி மரத்திற்கு 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. 6.40 மணிக்கு மகாதீபாரதணை நடந்தது. தேவாரம், திருப்புகழ் பாடல்களை பக்தர்கள் பாடினர்.
முக்கிய திருவிழா: 5ம் நாள் விழாவில் இரவு 7.30 மணிக்கு குட வருவாயில் தீபாரதணை. ஏழாம் நாள் விழாவில் அதிகாலை 4.30 மணிக்கு உருகு சட்ட சேவை. 8.45 மணிக்கு வெற்றி வேர் சப்பரம். மாலை 4 மணிக்கு சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில்,சிவப்பு சாத்தி கோலத்தில் காட்சியளிப்பார். எட்டாம் நாள் விழாவில் சுவாமி சண்முகர் பகல் 12 மணிக்கு பச்சை சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பத்தாம் நாளான மர்õச் 4 ல் காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கும். 11 ம் நாளில் இரவு 11 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடக்கும். 12 ம் நாளில் உற்சவம் நிறைவு பெறும். ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் ஞானசேகரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.