திருவொற்றியூர்: திருவொற்றியூரில், தியாகராஜ சுவாமிக்கும், வடிவுடையம்மனுக்கும், திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம், இரவு, 9:00 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெற்றது. திருவீதி உலா முடிந்து, இரவு 11:00 மணிக்கு, தியாகராஜ சுவாமிக்கும், வடிவுடையம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.