பதிவு செய்த நாள்
24
பிப்
2015
11:02
நத்தம் : நத்தம் மாரியம்மன் கோயிலில், மாசி திருவிழாவையொட்டி, நேற்று காலை அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உட்பட பதினெட் டு வகையான அபிஷேகமும், மலர்களால் அலங்காரமும், அர்ச்சனையும் நடந்தன.காலை 9.30 முதல்10.30 மணிக்குள் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை செய்து, மஞ்சள் துணியில் அம்மன் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது.
விழாவில் இன்று 24 ம்தேதி பக்தர்கள் உலுப்பக்குடி கர ந்தன்மலை கன்னிமார் அருவியில் தீர்த்தக்குடம் எடுத்து வருவர். சந்தனக்கருப்புக் கோயிலில் வைத்து வழிபட்டு காலை 9 மணிக்கு மாரியம்மன் கோயிலுக்கு அழைத்து வரப்படுவர். பின் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனையும் செய்து நேர்த்திக்கடனுக்காக காப்புக் கட்டும் நிகழ்ச்சியும் நடைபெறும். தொடர்ந்து திருவிழா 16நாட்கள் நடைபெறும். கோயில் செயல் அலுவலர் ஞானசேகரன், பரம்பரை பூஜாரிகள் சொக்கையா, சின்னராஜூ, நடராஜன், கிருஷ்ணமூர் த்தி, சுரேஷ் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.