பதிவு செய்த நாள்
21
ஜூன்
2011
11:06
ஜம்மு : காஷ்மீரின் புகழ்பெற்ற யாத்திரைத் தலமான அமர்நாத்திற்கு செல்ல, இதுவரை, 2.25 லட்சம் பேர், தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். காஷ்மீரின் புகழ்பெற்ற அமர்நாத் குகைக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பனிலிங்கம் உருவாகும். இதைத் தரிசிக்க, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்வர். இந்த ஆண்டுக்கான யாத்திரை ஏற்பாடுகளை காஷ்மீர் மாநில அரசும், ஸ்ரீஅமர்நாத் கோயில் வாரியமும் இணைந்து செய்து வருகின்றன. அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரை, வரும் 29ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 13ல் முடிகிறது. யாத்திரைக்கான முன்பதிவுத் திட்டத்தை, கடந்த மே 10ம் தேதி, அமர்நாத் கோயில் வாரியம் துவக்கி வைத்தது. முன்பதிவுத் திட்டத்தைப் பயன்படுத்தி, இதுவரை, 2 லட்சத்து, 25 ஆயிரத்து, 76 பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர். இவர்களில், 45 ஆயிரத்து, 495 பேர், இணையதளம் மூலமும், மற்றவர்கள், வங்கிக் கிளைகளில் நேரிலும் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில், யாத்திரை சுமுகமாக நடப்பதற்காக, மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் (சி.ஆர்.பி.எப்.,) 5,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.