பெரியகுளம் : கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடந்தது. பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா ஜூலை 11ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி நேற்று முகூர்த்தக்கால் ஊன்றும் விழா செயல் அலுவலர் சுதா தலைமையில் நடந்தது. அம்மனுக்கு பாலாபிஷேகம், பன்னீர், தயிர், இளநீர், சந்தன அபிஷேகங்கள் நடந்தன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தென்கரை வர்த்தக சங்க தலைவர் சிதம்பரசூரியவேலு முன்னிலை வகித்தார். முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தாமோதரன், தங்கம்-முத்து பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர் முருகன் உட்பட மண்டகப்படிதாரர்கள் கலந்து கொண்டனர்.