ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ சள்ளச்சேரி அங்காளம்மன் கோவிலில் மகா சிவராத்திரி உற்சவத்தில் தீ மிதி திருவிழா நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் மங்கா ங்குளத் தெருவில் உள்ள ஸ்ரீ சள்ளச்சேரி அங்காள பரமேஸ்வரி பாவாடைராயன், உலகளந்த அய்யனார் ராசாத்தியம்மன் கோவில் மகா சிவராத்திரி உற்சவம் கடந்த 17ம் தேதி தொடங்கியது. 18ம் தேதி மதியம் மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் அக்னி கரகம் தீமிதி உற்சவம் நடந்தது. இதில் அக்னி கரகம் திருக்குளத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவில் வளாகத்தில் தீ மிதி உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து 28ம் தேதி வரை உற்சவம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் பூசாரி தர்மலிங்கம், நிர்வாகிகள் ரங்கசாமி, இளையபெருமாள், முக்கிய பிரமுகர்கள் செய்திருந்தனர்.