காரியாபட்டி : காரியாபட்டி கம்பிக்குடி மீனாட்சிசுந்தரேஸ்வரர் மற்றும் வேணுகோபாலசாமி கோயில்களில் 12 ஆண்டுகளுக்குப்பின் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் கணபதி பூஜை, யாகசாலை பூஜைகள், முதல்கால பூஜை, புண்யாகவாசனம், கும்ப அலங்காரம் செய்யப்பட்டது. மூன்றாம் நாள் யாகசாலை பூஜைகள், பூர்ணாகுதி, யாத்ராதானம் மற்றும் புனித நீரால் கோபுர கலசங்களுக்கு ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. நிர்வாக இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா, இணை நிர்வாக இயக்குனர் ஆர்த்திகிருஷ்ணா தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர். சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன. அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை டி.வி.எஸ்., சுந்தரம் பாஸனர்ஸ் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.