டி.கல்லுப்பட்டி:டி.கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சி மலை சிவன் கோயில் குளத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதி கிராமத்தினர், இங்கு வந்து இறந்த முன்னோர்களுக்கு இங்கு ஈமச்சடங்குகளை செய்வதை புண்ணியமாக கருதி செய்து வருகின்றனர். இதனால் தினமும் பக்தர்கள் கூட்டம் வருகிறது. மலைப்பகுதி மற்றும் மரங்கள் உள்ளதால் வழிப்போக்கு வாகனங்கள் மாணவர்கள் ஓய்வெடுக்க வருகின்றனர். கோயில் முன் உள்ள குளம் பராமரிப்பு இன்றி உள்ளது. பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் கொட்டப்படுவதால் தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. எனவே பக்தர்கள் நலன் கருதி இந்தக்குளத்தை அரசு அதிகாரிகள் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.