பதிவு செய்த நாள்
25
பிப்
2015
12:02
நகரி: வெங்கடேச பெருமாள் கோவிலில், 32 நாட்களில், பக்தர்கள் உண்டியலில், 12.96 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். சித்துார் மாவட்டம், வடமால்பேட்டை அடுத்த, அப்பாலயகுண்டா கிராமத்தில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம், இக்கோவிலில் உண்டியல் காணிக்கை, திருப்பதி தேவஸ்தான அதிகாரி நாகரத்தினம்மாள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. இதில், பக்தர்கள், 12,96,100 ரூபாய், 32 நாட்களில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.