நாகர்கோவில்: அதிமுக பொது செயலாளர் ஜெ., பிறந் நாளை ஒட்டி குமரி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இங்குள்ள விநாயகர் கோயிலில் 108 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தப்பட்டது. மாணவரணி செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.இதில் நாகர்கோவில் எம்.எல்.ஏ. முருகேசன், மாவட்ட துணை செயலாளர் ராஜன், ஜெ., பேரவை செயலாளர் சேவியர் மனோகரன், ஒன்றிய செயலாளர் கேசியூ மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.