பதிவு செய்த நாள்
03
மார்
2015
12:03
கோபி: கோபி தாலுகா, பெருமுகை கிராமம், அண்ணா நகர் உரம்புக்கிணறு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது. நேற்று காலை, 4.30 மணிக்கு மேல், மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, மஹா பூர்ணாஹூதி, உபச்சாரம், இரண்டாம் கால யாக வேள்வி, கலசங்கள் ஆலயம் வந்தன. காலை, 6.30 முதல், 7.30 மணிக்கு விநாயகர், உரம்புக்கிணறு மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகருக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 8 மணிக்கு அன்னதானம் நடந்தது.