பதிவு செய்த நாள்
03
மார்
2015
12:03
பந்தலூர் : பந்தலூர் அருகே அத்திக்குன்னா எஸ்டேட் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இவ்விழாவை தொடர்ந்து, 27ம் தேதி காலை, 7:30 மணிக்கு விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமத்துடன், கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து நாள்தோறும், சிறப்பு பூஜைகள் நடந்தன. கடந்த, 1ம் தேதி மஹா பூர்ணாஆகுதி, மஹா தீபாராதனை, யாத்திர தானம், கலசங்கள் ஆலயவலம்வருதல் சிறப்பு பூஜைகளுடன், காலை, 9.30 மணிக்கு கோபுர கும்பாபிஷேகம், கருவரை கும்பாபிஷேகம், தசதரிசனம், மஹா அபிஷேகம், தீபாராதனை மற்றும் தீர்த்தம் வழங்குதல் நடந்தது. அன்னதானம், மாவிளக்கு பூஜை இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
பூஜைகளை கனநாதன் குருக்கள் தலைமையிலான குழுவினர் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் தர்மகர்த்தா நாகையாதலைமையிலான கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.