திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே பாலம்ராஜக்காபட்டியில் உள்ள சாத்தாவு சுவாமி, வலம்புரி மங்கள விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நாளை(மார்ச் 4) நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை 7 மணிக்கு முதல்கால யாகபூஜை நடந்தது. இன்று காலை 6.30 மணிக்கு 2 ம் கால யாகபூஜை, மாலை 5 மணிக்கு 3 வது கால யாகபூஜை நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு 4 ம் கால யாகபூஜை நடக்கிறது. காலை 9.30 மணிக்கு கும்பாபிஷேகம், காலை 10 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.