கல்லல்:கல்லல் சோமசுந்தரேஸ்வரர் - சவுந்திரநாயகி அம்மன் கோயில் மாசி திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி சுவாமி அம்பாளுடன் கைலாச வாகனம், சிம்ம வாகனம், பூதவாகனம், கற்பக விருட்ச காமதேனு வாகனங்களில் வீதி உலா வந்தார். 28-ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, எட்டாம் திருவிழாவான கடந்த 2-ம் தேதி திருக்கல்யாணம், இரவு குதிரை வாகனத்தில் வீதி உலா நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு தேருக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை தேரோட்டமும் நடந்தது. 6.30 மணிக்கு தேர் நிலையம் வந்தடைந்தது. இன்று காலை தீர்த்தவாரி, மதியம் மகா அபிஷேகம், இரவு சப்தாவர்ணம், பஞ்சமூர்த்தி புறப்பாடு, கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது.