பதிவு செய்த நாள்
04
மார்
2015
02:03
கும்மிடிப்பூண்டி: மாசி மகத்தை முன்னிட்டு, சுண்ணாம்புகுளம் காளஹஸ்தீஸ்வரர் கோவிலில், இன்று, கடலாடு உற்சவம் நடைபெற உள்ளது.
கும்மிடிப்பூண்டி அடுத்த, சுண்ணாம்புகுளம் கிராமத்தில், ஞானபிரசுனாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் மாசி மாதம், மகம் நட்சத்திரத்தில், கடலாடு உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, இன்று அந்த உற்சவம் நடைபெற உள்ளது.
காலை 6:00 மணிக்கு, கணபதி பூஜை, சுவாமிக்கு நவகலச பூஜை மற்றும் தீபாராதனை நடைபெறும. அதன்பின், காலை 10:00 மணியளவில், கோவிலின் பின்புறம் உள்ள கடலோரத்திற்கு, பரிவார மூர்த்திகளுடன் சுவாமி சென்றபின், கடலாடு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை செய்து, பிரசாதம் வழங்கப்படும். அதை தொடர்ந்து, சுவாமி வீதிஉலா நடைபெறும்.