சங்கராபுரம்;சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் மாசி மாத பூச விழா நடந்தது.சங்கராபுரம்அருட்பெரும்ஜோதி ஆண்டவர் திருச்சபையில் நடந்த மாசி மாத பூச விழாவிற்கு வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மன்ற நிர்வாகிகள் வைத்திலிங்கம், நாராயணன், மன்ற பொருளாளர் முத்துகருப்பன், பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.விழா அமைப்பாளர் தலைமை ஆசிரியர் லட்சுமிபதி வரவேற்றார். மன்ற பூசகர்கள் தமிழ்மணி அடிகள், வேலா சிவஞான அடிகள் முன்னிலையில், அகவல் படித்து உலக நலனிற்காக பிரார்த்திக்கப்பட்டது. ஜோதி தரிசனத்திற்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.விழாவில் மாரிமுத்து ஆசாரி, சேரன், பாரதி, கல்யாணி சிவஞான அடிகள், கார்த்திகேயன், நரசிம்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாமா லட்சுமிபதி நன்றி கூறினார்.