பதிவு செய்த நாள்
05
மார்
2015
12:03
ஈரோடு: ஈரோடு நக்கீரர் வீதி, காளமேகம் வீதியில் உள்ள சித்தி விநாயகர், புது எல்லை மாரியம்மன் கோவில் ஆண்டு விழா, 24ம் தேதி பூச்சாட்டுதலுடன் நடந்தது. 25ம் தேதி கணபதி ஹோமம், கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று இரவு, எட்டு மணிக்கு அம்மன் புஷ்ப பல்லக்கு நகர் உலா நடக்கிறது.நாளை காலை, ஐந்து மணிக்கு காவிரி சென்று தீர்த்தம், பால்குடம், கபாலம் எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடக்கும். மதியம் ஒரு மணிக்கு அன்னதானம் நடக்கிறது. வரும், 7ம் தேதி அம்மனுக்கு காய்கனி அலங்காரம், 8ம் தேதி இரவு, ஒன்பது மணிக்கு கும்பம் வாய்க்காலில் விடுதல் நிகழ்ச்சியும், 9ம் தேதி இரவு, ஒன்பது மணிக்கு மறுபூஜையும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர், மாநகராட்சி, 54 வது வார்டு மக்கள் செய்து வருகின்றனர்.