பதிவு செய்த நாள்
09
மார்
2015
11:03
அவிநாசி : பூண்டியில் உள்ள கூப்பிடு விநாயகர் கோவிலில் "ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழா நடைபெற்றது. முன்னதாக, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பின், வேடன் அலங்காரத்தில் வந்த திருமுருகநாத சுவாமி (சிவன்), சுந்தரமூர்த்தி நாயனாரிடம் நகைகளை எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது.பின், பூண்டி கோவிலில் சிறப்பு பூஜை, வழிபாடு நடத்தப்பட்டு, தேவாரம் பாடப்பட்டது. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, நகைகளை எம்பெருமான் திருப்பி அளித்தபின், மீண்டும் பூஜைகள் நடந்தன. இதையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூண்டி, அவிநாசி, அணைப் புதூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.