பதிவு செய்த நாள்
12
மார்
2015
12:03
திருப்பூர்: திருப்பூர் அவிநாசி ரோடு, ஸ்ரீசிருங்கேரி சங்கர மடத்தில், 28ம் ஆண்டு பிரதிஷ்டா தின விழா, 15ல் துவங்குகிறது. அன்று காலை 8:30க்கு சாரதாம்பாளுக்கு மஹா அபிஷேகம், மதியம் 12:00க்கு தீபாராதனை நடக்கிறது.வரும் 25ல், பாரதி தீர்த்த சுவாமிகளின் 65வது வர்தந்தி, நவகிரக ஆயுஷ்ய ஹோமாதிகள், தீபாராதனை நிகழ்ச்சி நடக்கும்.ஏப்., 23 காலை 8:00க்கு உபநிஷத் பாராயணம், வேத பாராயணத்துடன் துவங்கும் விழா, அன்று காலை 10:00க்கு மஹா தீபாராதனையுடன் நிறை வடைகிறது.