ஓமலூர்: ஓமலூர் அருகே, பச்சனம்பட்டி மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடந்தது. ஓமலூர் அடுத்து உள்ள பச்சனம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. 9ம் தேதி அம்மனுக்கு அபிஷேகமும், 10ம் தேதி, இரவு அம்மன் அழைப்பு நிகழ்ச்சியும் நடந்தது.நேற்று காலை சக்தி கரகம், அக்னி கரம் எடுக்கும் நிகழ்ச்சியும், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை, 6 மணியளவில், முக்கிய விழாவான, தீ மிதி திருவிழா நடந்தது. ஏராளமானோர் கலந்துகொண்டு, அக்னி குண்டம் இறங்கி தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர்.