Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆலங்குடி குருபகவானுக்கு 10,008 ... மாஷபுரீஸ்வரர் கோவிலில் தேர் வெள்ளோட்டம்! மாஷபுரீஸ்வரர் கோவிலில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி. மலை அண்ணாமலையார் கும்பாபிஷேக திருப்பணிக்கு பாலாலய பூஜை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தி. மலை அண்ணாமலையார் கும்பாபிஷேக திருப்பணிக்கு  பாலாலய பூஜை!

பதிவு செய்த நாள்

13 மார்
2015
10:03

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், மஹா கும்பாபிஷேக திருப்பணி, இரண்டாம் கட்ட பாலாலய பூஜை, 15 சன்னதிகளில், நேற்று நடந்தது. நினைக்க முக்தி தரும் தலமாகவும், பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், 2002 ஜூன், 27ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

அதையடுத்து, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மஹா கும்பாபிஷேக விழாவினை, அண்ணாமலையார் கோவிலில் மீண்டும் நடத்திட, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, மஹா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, 27 கோடி ரூபாயில், திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.இதற்காக கோவிலில் உள்ள ஒன்பது கோபுரங்கள் மற்றும் கோவிலில் உள்ள சன்னதிகளை புதுப்பிக்கப்படுகின்றன. முதற்கட்டமாக கடந்த ஜனவரி, 26ம் தேதி, 9 கோபுரங்களுக்கும், பாலாலய பூஜை நடத்தி, அதன் சக்தியை முழுவதும் அத்திமர பலகையில் ஆவாஹணம் செய்து, அதனை பாதுகாப்பாக வைத்து, தினசரி பூஜை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், இரண்டாம் கட்டமாக நேற்று, ராஜகோபுர விநாயகர், கோபுரத்திளையனார் சன்னதி, கம்பத்து இளையனார் சன்னதி, சிவகங்கை தீர்த்த விநாயகர், பெரியநந்தி, கல்யாணசுந்தரேஸ்வரர், வன்னிமர விநாயகர், காலபைரவர், சின்னநந்தி, ஆணைதிறை கொண்ட விநாயகர், பிச்சை இளையனார், பிரம்மலிங்கம், வினைதீர்க்கும் விநாயகர், வித்யாஈஸ்வரர், ஆலமர விநாயகர், உள்ளிட்ட, 15 சன்னதிகளுக்கான பாலாலயம் நடந்தது.இதில், கோவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்கி, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar