உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே, மாஷபுரீஸ்வரர் கோவிலில், 60 ஆண்டுகளுக்கு பிறகு, புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை பேரூராட்சி உளுந்தாண்டார் கோவில் பகுதியில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த லோகாம்பிகை வலமுறை மாஷபுரீஸ்வரர் கோவிலுக்கு, ரூ. 30 லட்சம் மதிப்பில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டது. இத்தேர், நேற்று காலை 8.30 மணிக்கு வெள்÷ ளாட்டம் விடப்பட்டது. குமரகுரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். சாரதா ஆசிரம யத்தீஸ்வரி ஆத்மவிகாச பிரியா அம்பா, அறநிலையத் துறை ஆய்வாளர் சரவணன், பேரூராட்சி தலைவர் ஜெய்சங்கர், ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம் உட்பட பலர் தேர் வடம் பிடித்தனர்.