பதிவு செய்த நாள்
23
ஜூன்
2011
11:06
புதுச்சேரி : உருளையன்பேட்டை கலியுக அன்னை பாராசக்தி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. உருளையன்பேட்டை மறைமலையடிகள் சாலையில் உள்ள கலியுக அன்னை பாராசக்தி கோயில் கும்பாபிஷேகம் கடந்த 20ம்தேதி கணபதி ஹோமம், நவகிரக ஹோமங்களுடன் துவங்கியது. 21 ம்தேதி இரண்டாம் கால யாக சாலை பூஜைகள், விமான கலச ஸ்தாபனம், பூர்ணாஹூதி, தீபாராதனை உள்ளிட்டவை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான மகாகும்பாபிஷேக விழா காஞ்சிகாமகோடி பீடாதிபதிகள் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தலைமையில் நேற்று நடந்தது. 6 மணிக்கு கலச புறப்பாடு, 9 மணிக்கு விமானம், ராஜகோபுரம் கும்பாபிஷேகம், விநாயகர், பாலமுருகன், துர்கை, நவக்கிரகம், அன்னை பராசக்தி ஆகியதெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. 10 மணிக்கு அன்னதானம். இரவு 7 மணிக்கு சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் நேரு எம்.எல்.ஏ., சப்தகிரி சிவக்கொழுந்து உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.