பூந்தமல்லியை அடுத்து, திருமழிசையில் உள்ளது ஒத்தாண்டேஸ்வரர் கோயில். இங்குள்ள லிங்கம் தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் காணப்படுகிறது. கருவறையில் லிங்கத்துக்கு பின்புறம் அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சுவாமி காட்சி தருகிறார். கிழக்கு நோக்கி அருளும் இவ்விருவரையும் தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கும்: மனோபலம் கூடும்: முக்தியும் கிடைக்கும்.