திருவள்ளூருக்கு அருகில் உள்ளது ஈக்காடு. இங்குள்ள கோயிலில் அருள்பாலிக்கிறார். திரிபுரசுந்தரி அம்பாள் சமேத பஞ்சவர்ணேஸ்வரர். அமிர்தமய லிங்க ரூபத்தில் அருள்பாலிக்கும் இவ்விறைவன், காலை, முற்பகல், நண்பகல், பிற்பகல், மாலை ஆகிய வேளைகளில் ஐந்து வண்ணங்களில் காட்சியளிப்பதால் பஞ்சவர்ணேஸ்வர் எனும் திருப்யெரில் அழைக்கப்படுகிறார்.