காரைக்காலில் மாணவர்கள் பெற்றோர்களிடம் வாழ்த்து பெறும் நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2015 12:03
காரைக்கால்: காரைக்காலில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் வாழ்த்து பெறும் நிகழ்ச்சி நடந்தது. காரைக்கால் அம்மையார் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் மாதா பிதா குரு தெய்வம் ஆகியோரை வணங்கி ஆர்சீர்வாதம் பெறும் வழக்கத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பூஜை விழா நடந்து வருகிறது. அதன்படி மாணவர்கள் அதிகம் மதிப்பெண் எடுக்கவேண்டும் என்று நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் சிறப்பு பூஜை நடந்தது. பின் கணபதி பாடலுடன் துவங்கிய விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் அலமேலு வரவேற்றார். பள்ளியின் அறக்கட்டளை செயலாளர் ஸ்டாலின்மணி தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் விஜயன், தேசிகன், துணை தலைமை ஆசிரியர் ராஜேஷ்பெண்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., பயிலும் 129 மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர்களின் அதிகம் மதிப்பெண் பெறவேண்டும் என்று மாணவர்கள் மலர்கள் தூவி வாழ்த்து பெற்றனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.