பூலோகநாதர் கோவிலில் நாயன்மார்களுக்கு சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2015 12:03
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. கோயமுத்தூர் பேரூர் ஆதினத்தின் சண்டிகேஸ்வரர் நற்பணி மன்றத் தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் தமிழகம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களுக்கு 63 நாயன்மார்களின் சிலைகளை எடுத்துச் சென்று சிறப்பு பூஜை செய்து வருகின்றனர். இக்குழுவினர் நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலுக்கு வந்தனர். அங்கு 63 நாயன்மார்கள் மற்றும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் செய்து வழிபட்டனர். பூஜைகளை குமார் குருக்கள் செய்தார்.