பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் மகாலட்சுமி கோவிலில், உலக நலன் வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. குடும்பத்தில் அமைதி நிலவும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், போதுமான மழை பெய்து, இயற்கை வளம் பெருகவும் வேண்டி, நரசிம்மநாயக்கன் பாளையம் மகாலட்சுமி கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி, மகாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகாலட்சுமி கோவில் நிர்வாகம் செய்திருந்தது.