பதிவு செய்த நாள்
17
மார்
2015
11:03
கோவை : சித்தாபுதுார் அய்யப்ப சுவாமி கோவிலின், 46வது ஆண்டு விழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அய்யப்ப சுவாமி கோவிலில் சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்ட தினமான, பங்குனி மாதம் ரோகினி நட்சத்திரத்தில், ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. நாளை கொடியேற்றத்துடன், விழா துவங்கி, 25ம் தேதி ஆறாட்டுடன் நிறைவடைகிறது.நாளை மாலை 7:00 மணிக்கு, நீலகண்டன் நம்பூதிரி தலைமையில், கொடியேற்று விழா நடக்கிறது. மட்டனுார் பஞ்சவாத்திய சங்கத்தின், முத்தாயம்பகா நிகழ்ச்சி நடக்கிறது. ஒவ்வொரு நாளும், இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆறாம் நாள் விழாவான 23ம் தேதி, கோவிலில் உற்சவபலி நடக்கிறது. இரவு 7.00 மணிக்கு கானக கச்சேரி நடக்கிறது. மார்ச் 24 மாலை 6.30 மணிக்கு, சுவாமி தீபாராதனைக்குப்பிறகு, சுவாமி ஊர்வலம் நடக்கிறது.மார்ச் 25ல் ஆறாட்டு விழா நடக்கிறது. தொடர்ந்து, கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. அன்றாடம் காலை யானை வாத்தியத்துடன், சீவேலியும், மாலையில் காட்சி சீவேலியும் நடக்கிறது. இத்தகவலை கோவில் நிர்வாகிகள் ராமச்சந்திரன், பிரபாகரன், விஜயகுமார் தெரிவித்தனர்.