விழுப்புரம்: திருத்தணிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விழுப்புரம் நகரத்தார் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தேவகோட்டையிலிருந்து திருத்தணிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் குழு நேற்று விழுப்புரம் வந்தடைந்தனர். பைபாஸ் சாலையில் உள்ள ஏ.எஸ்.ஜி., திருமண மண்டபத்தில் பக்தர்களுக்கு விழுப்புரம் நகரத்தார் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. துணை தலைவர் சிங்காரம் தலைமையில் செயலாளர் அண்ணாமலை, பொருளாளர் செந்தில்நாதன் மற்றும் இணை செயலாளர் பழனியப்பன் வரவேற்பு அளித்து வழியனுப்பி வைத்தனர்.