பதிவு செய்த நாள்
18
மார்
2015
11:03
சேலம்,: சேலத்தில், பூட்டு முனியப்பன் கோவில் வழக்கு தொடர்பான மனு, விசாரணைக்கு பின், நேற்று, மனுதாரருக்கு, திருப்பி அனுப்பப்பட்டது.சேலம், ஏற்காடு ரோடு, அய்யந்திரு மாளிகை, பகுதியில், பிரசித்தி பெற்ற பூட்டு முனியப்பன் கோவில் உள்ளது. அரசு நிலத்தில் அமைந்துள்ள இக்கோவிலை, பள்ளிபட்டி, அய்யந்திருமாளிகை, கோரிமேடு, பெரிய கொல்லப்பட்டி, கம்பர் தெரு உள்ளிட்ட பொதுமக்கள், 20 ஆண்டாக, தங்கள் சொந்த பொறுப்பில் பராமரித்து வருகிறார்கள்.கடந்த, பிப்.,13ல், திடீரென, அரசு அதிகாரிகள், முனியப்பன் கோவிலை, அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் களம் இறங்கினர். முன் அறிவிப்பு மற்றும் நோட்டீஸ் விநியோகம் செய்யாமல், அத்துமீறிய அதிகாரிகளை கண்டித்து, அவர்களுடன், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட, அப்பகுதி மக்கள், ஆர்ப்பாட்டம், மறியல் என, அடுத்தடுத்து, தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.தொடர்ந்து, கோவிலை பாதுகாக்க, இரவில், அங்கேயே முகாமிட்டு, வருகின்றனர். அதே நேரத்தில்,கோவிலை இடிக்கும் நோக்கில், அதிகாரிகள், "குறி யாக உள்ளதால், அப்பகுதியில், அமைதியின்மை நிலவி வருகிறது.இந்நிலையில், பொதுமக்கள் தரப்பில், வக்கீல் இளையராஜா, மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணைக்கு பின், நேற்று, புகார்தாரருக்கு மனு திருப்பி அனுபப்பப்பட்டது.வக்கீல் இளையராஜா கூறியதாவது: அரசு நிலத்தில் உள்ள கோவிலை, முறையாக, நோட்டீஸ் அனுப்பி, முன் அறிவிப்பு செய்து, அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து, சட்டத்துக்கு புறம்பாக, கோவிலை இடிப்பது சரியல்ல; இது தொடர்பான மனு, விசாரணைக்கு பின் திரும்பியது. மீண்டும், மனுதாக்கல் செய்ய, பரிசீலனை செய்து வருகிறோம் என்றார்.