பதிவு செய்த நாள்
18
மார்
2015
11:03
காரிமங்கலம்: காரிமங்கலம் மலையில் அமைந்துள்ள, ஸ்ரீ அபிதகுஜலாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில், பிரதோஷ வழிபாடு இன்று (மார்ச்18) மாலை நடக்கிறது.
* காவேரிப்பட்டணம் அடுத்த பெண்னேஸ்வர மடத்தில் அமைந்துள்ள வேதநாயகி சமேத பெண்னேஸ்வரர் கோவில் பிரதோஷத்தையொட்டி இன்று மாலை, 4.30 மணிக்கு நந்திக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.
* தர்மபுரி, கோட்டை ஸ்ரீ மல்லிகார்ஜினேஸ்வர் கோவில், நெசவாளர் நகர் மகாலிங்கேஸ்வர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில், பாரதி புரம் காசி விஸ்வநாதர் கோவில், அரூர் தீர்த்தகரீஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் பிரதோஷத்தையொட்டி நந்திக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.