சேலம்: சேலம், எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழாவுக்கான பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.சேலம், குமாரசாமிப்பட்டியில் உள்ள எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழா, மார்ச் 24ம் தேதி மாவிளக்கு ஊர்வலத்துடன் துவங்குகிறது. மார்ச் 25ம் தேதி பொங்கல் திருவிழாவும், மார்ச் 26ம் தேதி அக்னி குண்டம் நிகழ்ச்சியும், மார்ச் 27ம் தேதி பால் குட ஊர்வலம் மற்றும் வண்டிவேடிக்கை நிகழ்ச்சியும், மார்ச் 28ம் தேதி சத்தாபரணமும், மார்ச் 29ம் தேதி மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.இத்திருவிழாவுக்கான பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மண்டலக்குழு தலைவர் மாதேஸ்வரன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.