ஒருமுறை நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள், தாயிப் நகருக்கு இஸ்லாத்தைப் பரப்பும் பணிக்காகச் சென்றார்கள். அவ்வூர் தலைவனான அப்த் யலீலுக்கு இது பிடிக்கவில்லை. நாயகத்தைத் தாக்க அடியாட்களை அனுப்பினான். அவர்கள் நாயகத்தின் மீது கல்லெறிந்தார்கள். ரத்தம் அதிகமாக வெளியேறவே, நாயகம் கீழே சாய்ந்தார்கள். ஆனாலும், மனஉறுதி தளராமல், அங்கிருந்து கர்ன் அத்தாலிப் என்ற ஊருக்குச் சென்று விட்டார்கள்.அப்போது அல்லாஹ் ஒரு வானவரை நபிகளிடம் அனுப்பி வைத்தான். அவர் வேதனையை குறைய வைக்கும் வானவர் ஆவார். அந்த வானவர் நபிகளாரிடம், இறைத்துõதரே! தாங்கள் அனுமதித்தால், அபூகுபைஸ், ஜப்ல் அஹ்மர் என்ற மலைகளை ஒருங்கிணைத்து, தாயிப் நகர மக்களை நசுக்கித் தள்ளி விடுகிறேன், என்றார். நபிகளாரோ மிகுந்த கருணையுடன், வேண்டாம், இந்த விஷயத்தை என்னோடு விட்டுவிடுங்கள். நான் இவர்களுக்கு அல்லாஹ்வின் தண்டனை குறித்து எச்சரித்துக் கொண்டே இருப்பேன். அவர்களில் சிலரது உள்ளத்தையாவது அல்லாஹ் நேர்வழியில் திருப்பிவிடக்கூடும். அல்லது அவர்களது வழித்தோன்றல்களாவது நேர்வழி பெறக்கூடும், என்றார்கள்.இப்படி நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள், இரக்கத்தின் வடிவமாகத் திகழ்ந்தார்கள்.