Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எங்கள் குல தெய்வம்! நன்றி மறவாத நல்ல மனம் வேண்டும் (மகான் பாரதியார்) நன்றி மறவாத நல்ல மனம் வேண்டும் (மகான் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அன்பே வா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2015
05:03

அன்பு என்பது ஒரு செயல் அல்ல. அது மனிதனின் இயல்பு. உண்மையான அன்பால் யாருக்கும் எந்தக் கெடுதலும்ஏற்படுவதில்லை. ஆனால், பல சமயங்களில் இந்த அன்பே, பேராசை, கோபம், பொறாமை இவற்றுக்கு காரணமாகி விடுகிறது.ஆம்! குழந்தைகள் மீதும், உறவுகள் மீதும் கொண்ட அன்பால் பிறருக்கு துன்பம் விளைவிக்கும் சூழ்நிலைகள் உருவாகி விடுகின்றன.அன்பை இந்த உலகிலுள்ள எல்லாருமே அறிந்திருப்பர். பெற்றோரிடம், குழந்தைகளிடம், மனைவியிடம், நண்பர்களிடம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அன்பு என்றால் என்னவென்று தெரியாதவரோ, அதன் ஆழம் வரை சென்றிராதவரோ யாரும் இல்லை. சிலர் அன்பைப் பற்றி புத்தகங்களில் படிக்கிறார்கள். இது நமக்குள் மாறுபட்ட கருத்துகளையே உருவாக்கும். உண்மையிலேயே மனஅழுத்தத்தை விட்டொழிக்கும் போது தான், நம்மால் பிறர் மீது அன்பு செலுத்த முடியும். அன்பில் இரு வகை உண்டு. ஒன்று நிபந்தனையுள்ள அன்பு. இது வியாபாரம் போன்றது. நான் விரும்பும் வகையில் செயல்புரிந்தால், நான் உன்னை நேசிப்பேன், என்ற வகையில் இது சேரும். இன்னொன்று நிபந்தனையற்ற அன்பு. இதில் சுயநலம் இருக்காது. இவ்வகை அன்பே உறுதித்தன்மை பெற்றது.அன்பு செலுத்த கற்றுக்கொள்வது என்பது மிகவும் சிரமமான ஒன்று. ஏனெனில், மனித மனம் சந்தேகங்களில் ஊறித்திளைப்பது. யாராவது ஒருவர் நம்மிடம்,நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன், என்று சொன்னால், அப்படியா! உண்மையாகவா! என்று சந்தேகத்துடன் எதிர்க்கேள்வி பிறக்கிறது. அதே சமயம், உங்களை எனக்குப் பிடிக்காது, என்று சொன்னால், அப்படியா! உண்மையாகவா! என்று  கேட்பதில்லை. இப்போது சொல்லுங்கள்... நம்மிடம் அன்பைக் கொட்டுகிறவர்களை நாம் சந்தேகிக்கிறோமா.. இல்லையா என்று!சரி...இந்தக் குணத்தை என்னால் மாற்றிக்கொள்ள முடியுமா!நிச்சயமாக! நீங்கள் ஒருவரிடம் அன்பு  செலுத்துவதாக வைத்துக் கொள்வோம். உடனேயே அவரோ அல்லது அவளோ உன்னிடம் அன்பு செலுத்துகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். உண்மையிலேயே, அவர்கள் உங்கள் மீது அன்பு செலுத்தவில்லை என்று தெரிந்தாலும் கூட, நீங்கள் அவர்கள் உங்கள் மீது அன்பு வைத்திருப்பதாக பாவனை செய்து கொள்ள வேண்டும். ஓ! நீ என்மேல் எவ்வளவு பிரியம் வைத்திருக்கிறாய், என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நாம் ஒருவர் மீது அன்பு செலுத்தினாலும் கூட, அவர் நம்மைப் புண்படுத்தலாம். புண்படுதல் என்பதும் அன்பின் ஒரு அங்கம் என்பதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்மைப் புண்படுத்த அவருக்கு உரிமையிருக்கிறது என்ற மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது உன் மனம் நிரந்தர நிம்மதியில் திளைக்கும்.(மகான் ஸ்ரீ.ஸ்ரீ. ரவிசங்கர் ஜி)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar