Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்பே வா! அதிகாலை மட்டுமே பூஜை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நன்றி மறவாத நல்ல மனம் வேண்டும் (மகான் பாரதியார்)
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நன்றி மறவாத நல்ல மனம் வேண்டும் (மகான் பாரதியார்)

பதிவு செய்த நாள்

18 மார்
2015
05:03

இன்பத்தை தேடி எங்கும் அலைய வேண்டாம். அன்பு உண்டானால் இன்பம் உண்டு. அன்பு கொள்கையில் இருந்தால் மட்டும் போதாது. செய்கையில் வெளிப்பட வேண்டும். உன்னிடம் கோடி ரூபாய் இருந்தாலும், தேச நன்மைக்காக கொடுத்துவிட்டு ஏழையாகி விடத் துணிவாயானால், நீ அன்புடையவனாகக் கருதப்படுவாய்.  நேரத்தை வீணாகக் கழிப்பது கூடாது. அதை பயனுள்ள வழியில் ஊக்கத்துடனும், மகிழ்ச்சியுடனும் செலவழிக்க வேண்டும்.  கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில் விழுவதைப் போல, மனித சமூகம் நன்மையை நன்றாக உணர்ந்தும் கூட, தீமையில் சிக்கித் தத்தளிக்கிறது. பொய், நயவஞ்சனை, நடிப்பு, ஏமாற்றுதல் போன்ற கெட்ட வழிகளில் பொருள் ஈட்டக்கூடாது. மலர்ந்த முகம், இனியசொல், தெளிந்த மனதுடன் இருக்க முயலுங்கள். இடை விடாமல் உழைத்து பெருமையுடன் வாழுங்கள்.

இவற்றையெல்லாம் செய்து, நன்மை கிடைக்கவில்லையென்றாலும், விதிவசம் என்று மகிழ்ச்சியோடு இருங்கள். கடந்த காலத்தில் நடந்ததெல்லாம் போகட்டும். இனிமேல் நடக்க வேண்டிய விஷயத்தில் கருத்து செலுத்துங்கள்.  தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன். கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி.. பிறரை ஏமாற்றுவதை நிறுத்தி விட்டாலே தெய்வத்தின் அருளைப் பெற்று விட முடியும். துளியும் மற்றவர்களை ஏமாற்றுவதில்லை என்ற நிலையை உடையவன் எவனோ, அவனே கடவுள். நன்றி மறவாத நல்ல குணம் மனிதனுக்கு வேண்டும். அதுவே அவனுக்கு பெரிய மூலதனமாக இருக்கும். எதுவரை மனிதன் அநியாயம் செய்கிறானோ, அதுவரை கலியுகம் இருக்கும். அநியாயத்தை விட்டு விட்டால் கிருதயுகம்(சத்தியயுகம்) அந்த கணமே வந்து விடும்.  அமைதி, தைரியம், சக்தி, ஆற்றல், அருள், பக்தி சிரத்தை, பலம் போன்ற நல்ல எண்ணங்களால் மனதை நிரப்புங்கள். மனிதனுக்குப் பகைவர்கள் வெளியில் இல்லை. அவனது மனதிற்குள் இருக்கும் பயம், கோபம், சந்தேகம், பொறாமை போன்றவையே எதிரிகள். நம்பிக்கை இருந்தால் ஆகாய கங்கை கூட பூமிக்கு வந்துவிடும். எவ்வளவு பெரிய ஆபத்து வாழ்வில் குறுக்கிட்டாலும், நம்பிக்கை இருந்தால் வெற்றி கிடைத்து விடும்.  நம்பிக்கை என்பது விடாமுயற்சி தான். முயற்சி உள்ளவனை துன்பங்கள் பயமுறுத்தாது. நல்ல விஷயத்தை எடுத்துச் சொல்வது எளிது. ஆனால், சொன்னபடி நடந்து காட்டுவது அரிது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar