திருக்கனுார்: தொரவி கைலாசநாதர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்கனுார் அடுத்த தொரவியில் உள்ள பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மாலை நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. தொரவி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பக்தர்கள் நந்தீஸ்வருக்கு வழிபாடு செய்தனர். பூஜைகளை, புதுச்சேரி சரவணன் செய்தார். ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி சங்கர் மற்றும் சிவனடியார்கள் செய்திருந்தனர்.