சிவகங்கை : சிவகங்கை படமாத்தூர் அருகேயுள்ளது இலுப்பக்குடி. இங்குள்ள வாள குருநாதர்,அங்காளீஸ்வரி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 முதல் 20 வரையிலும், செப்.,17- 29 வரையிலும் காலை 7.30 மணிக்கு "சூரியஒளி மூலவர் சிலையில் விழுவது வழக்கம். இந்நேரத்தில் பக்தர்கள் சூரிய வழிபாடு நடத்துவர். நேற்று நடந்த சிறப்பு சூரிய வழி பாட்டிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோவில் பக்தசபை செயலாளர் இருளாண்டி கூறியதாவது: இக்கோவில் 300 ஆண்டு பழமை வாய்ந்தது. சிவ கங்கை, விருதுநகர், மதுரை மாவட்டங்களை சேர்ந்த 800 குடும்பத்தினருக்கு குலதெய்வமாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச், செப்ட ம்பரில் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் காலை 6.30 முதல் 7.30 மணி வரை சூரியன் உதயமாகும்போது, அதன் வெளிச்சம் மூலவர் சிலையின்மேல் படுவது விசேஷம். இந்நேரத்தில் வழிபாடு நடத்தினால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம் என்பதால் பக்தர்கள் அதிகமாக வருகின்றனர் , என்றார்.