கும்பகோணம்,: கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில், நாகநாத ஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு தனிகோவில் கொண்டு லட்சுமி, சரஸ்வதியுடன் கிரிகுஜாம்பிகை அம்மன் அருள்பாலிக்கிறார். இங்கு ஆண்டுதோறும் தை மாதம், 1ம் தேதி கிரிகுஜாம்பிகை தைலக்காப்பு நடைபெறும். தைலக்காப்பை தொடர்ந்து, லட்சார்ச்சனை தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு, அம்பாளுக்கு லட்சார்ச்சனை பூர்த்தி விழா நடைபெற்றது. இதனையொட்டி, இரவு அம்பாளுக்கு தயிர்பள்ளயத்துடன் சிறப்பு பூஜை, முதன்மை அர்ச்சகர் நாகராஜசிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது.