போடி : தென்திருவண்ணாமலை என அழைக்கப்படும் போடி பரமசிவன் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் வழிபட்டனர். ஏற்பாடுகளை பரமசிவன் கோயில் அன்னதான அறக்கட்டளையினர் செய்திருந்தனர். * சித்தர்கள் கட்டிய கோயிலாக கருதப்படும் கயிலை கீழச்சொக்கநாதர் சிவன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.