பதிவு செய்த நாள்
19
மார்
2015
11:03
விழுப்புரம்: வளவனூர் அமராவதி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 25ம் தேதி நடக்கிறது. வளவனூர் கடைவீதியில் அமைந்துள்ள அமராவதி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா, வரும் 22ம் தேதி துவங்குகிறது. அன்று மாலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி நடக்கிறது. தொடர்ந்து 23ம் தேதி காலை கோ பூஜை, லட்சுமி பூஜை, மாலை கும்ப அலங்காரம், பூர்ணாஹூதி, மறுநாள் 24ம் தேதி காலை இரண்டாம்கால யாகசாலை பூஜைகள், மாலை விக்கிரக பிரதிஷ்டை , அஷ்ட பந்தம் சாற்றுதல் நடக்கிறது. வரும் 25ம் தேதி 9:30 மணிக்கு கும்ப மூர்த்தி புறப்பாடு, 9:45 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 10:00 மணிக்கு அமராவதி விநாயகர் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் சண்முகம் முன்னிலை வகிக்கிறார். விழா ஏற்பாடுகளை பேரூராட்சி தலைவர் முருகவேல், பஞ்சாபகேச குருக்கள் மற்றும் குமாரகுப்பம், வளவனூர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.