காளையார்கோவில்: உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 25 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காலையில் அனுக்ஞை,விக்னேஸ்வரர் பூஜை, இரவு 7 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. தினமும் இரவு 8 மணிக்கு பல்வேறு வாகனங்களில் அம்மன் புறப்பாடு நடக்கும். முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.1ம் தேதி பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து தீச்சட்டி எடுத்தல் , காவடி எடுத்தல் நடைபெறும். ஏப் 2ம் தேதி காலை 6 மணிக்குமேல் தேரோட்டம், ஏப் 9ம் தேதி தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைபெறும்.