பதிவு செய்த நாள்
21
மார்
2015
12:03
வில்லியனூர் :கரசூர் சித்தேரியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை விழா, கடந்த 15ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மயானக் கொள்ளை திருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, காலையில் சிறப்பு அபிஷேகம், மாலை 5:00 மணியளவில், பாவடைராயனோடு காட்டேரி, குறத்தி வேடத்தில் மயான காளியாக மாட வீதியுலாவும், இரவு 7:00 மணிக்கு, மயா னம் சென்று வல்லாள கண்டனை வதம் செய்தலும், அதனை தொடர்ந்து, அம் மன் வீதியுலாவும் நடந்தது. இன்று (21ம் தேதி) மாலை, மஞ்சள் நீராட்டு விழாவும், 27ம் தேதியன்று, கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.