பதிவு செய்த நாள்
21
மார்
2015
12:03
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திறப்பு நடந்தது. பக்தர்கள், 22 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தி இருந்தனர்.சென்னிமலை மலை மீது புகழ் பெற்ற, முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நிரந்த உண்டியல், திருப்பணி உண்டியல், திருவிழா காலங்களில் வைக்கப்படும் சிறப்பு உண்டியல்கள் உள்ளன.நேற்று முன்தினம், பண்ணாரியம்மன் கோவில் துணை ஆணையர் மாரிமுத்து, ஈரோடு உதவி ஆணையர் சபர்மதி, பெருந்துறை வட்ட ஆய்வாளர் ஜெயமணி, சென்னிமலை முருகன் கோவில் செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறப்பு நடந்தது. இதில், நிரந்தர உண்டியலில், 14 லட்சத்து, 43 ஆயிரத்து, 100 ரூபாய், தங்கம், 116 கிராம், வெள்ளி, 848 கிராம் இருந்தது. சிறப்பு உண்டியலில், 86 ஆயிரத்து, 848ம், திருப்பணி உண்டியிலில், ஆறு லட்சத்து, 77 ஆயிரத்து, 273 ரூபாய் இருந்தது.மொத்தம், 22 லட்சத்து, 7,221 ரூபாய் காணிக்கை இருந்தது.இக்கோவிலில் உண்டியல் வசூல் அதிகரித்து வருவதாலும், பக்தர்கள் வருகையாலும், விரைவில் முதல் நிலை அந்தஸ்தை பெற உள்ளது.