பெரும்பாலான சிவன் கோயில்களில் மூலவருக்கு ஒரு சந்நிதியே இருக்கும். அரிதாக சில இடங்களில் இரண்டு மூலவர் சந்நிதி உள்ள கோயில்களும் இருக்கின்றன. சென்னை அச்சரப்பாக்கம் (உமை ஆட்சீஸ்வரர், எமை ஆட்சீஸ்வரர்), திருவொற்றியூர் (படம்பக்கநாதர், ஒற்றீஸ்வரர்), காஞ்சிபுரம்திருக்கச்சிமேற்றளி (திருமேற்றளீஸ்வரர், உற்றுக்கேட்டீஸ்வரர்), திருப்பனங்காடு (பனங் காட்டீஸ்வரர், கிருபாபுரீஸ்வரர்), திருவாரூர் மாவட்டம் திருப்புகலுõர் (அக்னீஸ்வரர், வர்த்தமானீஸ்வரர்),திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் (காசிபநாதர், எரிச்சுடையார்) ஆகிய கோயில்களில் இரண்டு சிவன் சந்நிதிகள் உள்ளன.