ஒரு சந்நிதியில் ஒரு லிங்கமே உள்ள சிவன் கோயில்களே அதிகம். ஆனால், திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் கனககிரீஸ்வரர், காசிவிஸ்வநாதர், திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகில் உள்ள மலையான்குளம் பாடக பிள்ளையார்கோயிலில் பாடகலிங்கம், மகாலிங்கம் என ஒரே கருவறையில் இரண்டு லிங்கங்களைத் தரிசிக்கலாம்.